குறிகாட்டுவான் துறைக்கு மின்சாரம் வழங்குங்கள் – உள்ளுராட்சி அமைச்சரிடம் நேற்று அப்பகுதி மக்கள் நேரில் கோரிக்கை!

Saturday, January 21st, 2017

குறிகாட்டுவான் சந்திவரை வந்த மின்சாரத்தை இறங்குதுறை வரை கொண்டு வந்து இப்பகுதியூடான போக்குவரத்தை இலகுபடுத்துவதற்கு ஆவன செய்யுமாறு மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் பைசல் முஸ்தபாவிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிகாட்டுவான்- நெடுந்தீவு இடையிலான புதிய படகுச் சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சரிடமே மேற்குறித்த கோhரிக்கையை பகுதி மக்கள் விடுத்தனர்.

நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் எழுவை தீவுகளுக்கான பிரதான போக்குவரத்து மார்க்கமாக விளங்கும் குறிகாட்டுவான் இறங்குதுறைப் பிரதேசத்திற்கு இன்றுவரை மின்சாரம் கிடையாது. இப்பகுதியினுடாக நயினாதீவு ஆலய உற்சவம் மற்றும் கச்சதீவு ஆலயங்களுக்கான  போக்குவரத்துக் காலத்தில் தீவுகளில் வாழும் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக குறிகாட்டுவான் சந்தியில் இருந்து 300 மீற்றர் வரையான இந்த இறங்குதுறைப் பிரதேசத்திற்கு மின் இணைப்பினை வழங்கி பாதுகாப்பான போக்குவரத்திற்கு உதவ முன்வரவேண்டும்.

இது குறித்து பல தடவைகள் உள்ளுர் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இன்று வரையில் குறித்த பணி இடம்பெறவில்லை. எனவே மேற்படி தேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்து குறித்த 300 மிற்றருக்கான மின் இணைப்பு வசதியை ஏற்படுத்தி தருமாறு கோருகின்றோம் என்றனர்.

gse_multipart43464

Related posts: