பயணக்கட்டுப்பாடு தொடர்பில் நாளை தீர்மானம் – இராணுவத் தளபதி!

Thursday, June 17th, 2021

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு தொடருமா அல்லது நீக்கப்படுமா என்பது குறித்து நாளையதினம் தீர்மானிக்கப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை நாளை சந்திக்கவுள்ள கொரோனா பணிக்குழு தற்போதைய நிலைமையை மறுஆய்வு செய்து இந்த விடயம் குறித்து தீர்மானிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள், திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: