மஞ்சள் காமாலை நோய்க்கான 2 ஆயிரம் தடுப்பூசிகள் அடுத்தவாரம் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, September 19th, 2023

மஞ்சள் காமாலை நோய்க்கான 2 ஆயிரம் தடுப்பூசிகள் அடுத்த வாரம், நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

மஞ்சள் காமாலை நோய்க்கான தடுப்பூசிகளின் தட்டுப்பாடு காரணமாக, கடந்த காலத்தில் சுகாதார அமைச்சு மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும், யுனிசெஃப் அமைப்பின் உதவியுடன், விரைவில் குறித்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தடுப்பூசியினை கொள்வனவு செய்யும் இறக்குமதியாளர்கள் ஒரு சிலரே உள்ளனர். இதனால் குறித்த தடுப்பூசிக்கான தட்டுப்பாடு காணப்பட்டது.

எனினும், நீண்ட கலந்துரையாடலுக்கு பின்னர், தற்போது குறித்த தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

குறித்த தடுப்பூசி, ஆபிரிக்க கண்டத்திற்கு செல்லும் இலங்கையர்களுக்கு, செலுத்தப்படவுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

வாய்ப்பேச்சு வல்லவர்களிடம் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதன்  விளைவுகள்தான் தமிழ்மக்களது உரிமைகளும் தேவைக...
சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை துரிதமாக அமுல்படுத்துமாறு துறைசார் தரப்பினருக்கு...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சு புலனாய்வு அமைப்புகள...