நாளாந்தம் ஒரு கோடி ரூபா நட்டம் – போக்குவரத்து சபையின் தலைவர்!

இலங்கை போக்குவரத்து சபைக்கு நாளாந்தம் ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் இடம்பெறும் டிக்கட் மோசடி காரணமாக இந்த நட்டம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை சோதனையிட இராணுவ பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கண்காணிப்பு நடவடிக்கையில் இந்தக் குழு செயற்பட்டு வருகிறது.
இலங்கையில் 107 போக்குவரத்து சபைகள் உள்ளன. அனைத்து போக்குவரத்து சபை பேருந்துகளிலும் பல நடத்துனர்கள் பாரியளவு டிக்கட் மோசடிகள் செய்வதனால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related posts:
கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா ஆரம்பம்!
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் தாங்கிய படையினர் – வெளியானது அதி விசெட வர்த்தமானி !
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி - சம்பளமில்லா விடுமுறையில் வெளிநாடு செல்லலாம் – அமைச...
|
|