நாட்டில் பொருளாதார நெருக்கடியை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர் – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குற்றச்சாட்டு!

Monday, November 1st, 2021

அரசாங்கத்தில் இருக்கும் ஒருசில தரப்பினர் நாட்டிற்குள் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

அரசங்கதிக்குள்ளேயே இருந்துகொண்டு எதிர்ப்பை வெளியிடும் நபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான தீர்மானங்கள் எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்திருந்தால் பொறுத்துக் கொண்டிருக்க முடியும் எனக் குறிப்பிட்ட அவர், அமைச்சர்கள் மற்றும் அரசதரப்பு உறுப்பினர்கள் இவ்வாறு நடந்துகொள்வது துரதிஷ்டவசமானது எனவும் கூறியுள்ளார்.

மேலும் அரசாங்கத்தில் பொதுமக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்துவதன் மூலம் என்ன வெற்றியை அடைய முடியும் எனவும் செஹான் சேமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான விசேட சந்திப்பில் இந்த பிரச்சினைகள் குறித்து எவரும் கவலை தெரிவிக்கவில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: