A/L பரீட்சை இன்றுடன் நிறைவு!
Monday, September 4th, 2017
ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவக்கு வருகின்றது.
குறித்த பரீட்சையில் மொத்தமாக 3 இலட்சத்து 15 ஆயிரத்து 227 பரீட்சாத்திகள் பங்குகொண்டனர் என பரீட்சைத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இன்றைய தினத்தில் பரீட்சைகள் நிறைவுபெற்றதன் பின்னர் பரீட்சை நிலைய வளாகங்களில் அமைதியற்ற முறையில் செயல்படுகின்ற மாணவர்களை கைது செய்யுமாறு காவல் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு கைதுசெய்யப்படுகின்ற மாணவர்களின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இரத்துசெய்யப்படலாம் எனவும் பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட 6 வயதுடைய மாணவி வல்லுறவுக்குட்படுத்தப் படவில்லை - மருத்துவ அறிக...
தகவல்களை மறைத்த பட்டதாரிகள்: 104 பேர் வேலை இழப்பு!
நாட்டை இயல்புக்கு கொண்டு வரும் செயற்பாட்டின் கீழ் அரச , தனியார் பிரிவுகளின் சேவைகள் திங்கள்முதல் ஆரம...
|
|
|


