எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் விசேட விடுமுறை!
Sunday, May 29th, 2022
சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் வார நாட்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.
விடுமுறைக்கான ஏதுநிலை சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் முன்னுரிமை அளிக்கும் வகையில் வழங்கப்பட்ட அட்டை பயனற்றுப் போயுள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த அட்டையைப் பயன்படுத்தி எரிபொருள் நிரப்ப முயற்சித்த சமயத்தில் சில மருத்துவர்கள் அச்சுறுத்தப்பட்டிருந்ததுடன், அவர்கள் மீது தாக்குதல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரசியலமைப்புத் திருத்தம்: மக்களது கருத்துக்களை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம்!
உணவுப் பொருட்களுக்கான விலைகளை நிர்ணயிக்க புதிய திட்டம்!
ஜனாதிபதி தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் !
|
|
|


