உணவுப் பொருட்களுக்கான விலைகளை நிர்ணயிக்க புதிய திட்டம்!

Friday, December 23rd, 2016

அரசு எதிர்ப்பார்க்கும் அரசிக்கான நிர்ணய விலைகள் கிடைக்கவுள்ளதாக கைத்தொழில் , வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது இதன் முதற்கட்டமாக இந்தியாவிடம் இருந்து இனி அரிசி வகைகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

அரிசிக்கான விலைகள் கிடைத்தவுடன் முதற்கட்டமாக பத்தாயிரம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் இருந்தும் அரிசி வகைகள் இறக்குமதி செய்வதனால் அந்நாட்டின் அரிசி வகைகள் குறித்து விஷேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நெற் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில் கையிருப்பிலுள்ள அரிசி தொகையும் சந்தைக்கு விநியோகிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

எதிர்காலத்தில் பருப்பு, சீனி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் இறக்குமதி செய்து மக்களுக்கு நிவாரண விலையில் விற்பனை செய்வதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, எதிர்காலத்தில் 25 வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை மக்கள் இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த திட்டத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் கூடுமானவரை மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

rice

Related posts: