நாட்டில் துவிச்சக்கரவண்டிகளுக்கு பற்றாக்குறை – விலையும் பாரியளவில் உயர்வு!

Tuesday, July 5th, 2022

சந்தையில் துவிச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு இன்மையால் அதன் விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் எவ்வாறாயினும், சில வர்த்தகர்கள் கையிருப்பில் உள்ள துவிச்சக்கர வண்டிகளை பல்வேறுப்பட்ட விலைகளில் விற்பனை செய்வதாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சந்தையில் துவிச்சக்கர வண்டிகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. இதன்படி, சாதாரண துவிச்சக்கர வண்டி ஒன்று 75 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கியருடன் கூடிய துவிச்சக்கர வண்டி 77 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: