யுத்தத்தின் வலிகளை துடைப்பதற்காக கிளிநொச்சி மக்களுக்கு எமது கட்சியின் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன –  எழுச்சி மாநாட்டு முதல்நாள் அமர்வில் தவநாதன்

Sunday, May 8th, 2016

பிரமாண்டமான முறையில் நடைபெறும் இம்மாநாட்டை பார்க்கும்போது நாம் எமது கட்சிப்பணிகளில் சரியான பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை காணமுடிகின்றது.

எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளை தாண்டியுள்ள போதும் கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் கிளிநொச்சிப்பகுதியில் எமது கட்சியின் மக்கள் பணிகள் நேரடியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இக்காலப்பகுதியில் எமது கட்சியின்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலின் கீழ் அதிகளவான வேலைத்திட்டங்களை பூர்த்தியாக்கி மக்களிடம் கொடுத்துள்ளோம்.

யுத்த காலத்தின்போது அதிகளவிலான அழிவுகளையும் வலிகளையும் முழுமையாக சுமந்த மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டமும் உள்ளடக்கப்படுகின்றது. யுத்தத்தால் அழிவடைந்த கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தியையும் மக்களின் வாழ்வாதார கட்டுமானங்களையும் வேகமாக முன்னேற்றமடைய செய்ததற்கு எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தீர்க்கதரிசனமான வழிநடத்தல்களும் அயராத முயற்சியுமே காரணம்.

யுத்தத்தால் அழிவுகளை சந்தித்த  எமது கிளிநொச்சி பகுதி மக்கள் தற்போது பிரதேசவாதம் என்னும் வலைக்குள் மீண்டும் சிக்கண்டு தவிக்கின்றனர். இத்தகைய பீடிப்புகளிலிருந்து மக்களை விடுவித்து ஒரு தூரநோக்குள்ள மக்களுக்கான உரிமைகள் மற்றும் வாழ்வியல்சார்ந்ததுமான தேவைகளை வென்றெடுப்பதற்கு இந்த மாநாட்டின் மூலம் நாம் ஒரு பரந்தளவிலான சேவையை செய்வதற்கு தயாராகுவோம்.

எனவே எமது கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் உத்வேகத்தடன் எமது மக்களின் வாழ்வியலுக்காக உழைக்க நாம் என்றும் பாடுபடுவோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் தவநாதன் தெரிவித்தார்.

Related posts: