ஒவ்வொரு செயற்பாடுகளும் பேதங்களற்ற வகையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, April 7th, 2020

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் பேதங்களின்றி மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது முதல் அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட்ட விதம் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டியதுடன் ஏனைய நாடுகளையும் விஞ்சும் வகையில் மக்களின் பாதுகாப்புக்காக உடனடி நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தது முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அன்றாட நடவடிக்கைகளை பேணிய வகையில் மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் சுகாதாரத்துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அரச மற்றும் தனியார் பொறிமுறைகளுடன் நிபுணர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் எப்போதும் செயற்பட்டதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts:

இன்றுமுதல் சேவைகள் வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டிருந்தும் தபால் சேவைகள் முமுமையாக இடம்பெறவில...
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி நடைமுறை - இன்று நள்ளிரவுமுதல் தொலைபேசி கட்டணங்களில் திருத்தம்!
விலங்கு தீவனத்துக்கும் பியர் தயாரிப்புக்களுக்கும் அரிசி பயன்படுத்துவதை இடைநிறுத்துமாறு விவசாயத்துறை ...

வெளிநாட்டிலிருந்து திரும்பிய பெரும்பாலானவர்களின் பி.சி.ஆர்.சோதனை முடிவுகள் தவறானவை - இராணுவ தளபதி த...
பயங்கரவாதத் தடை சட்டத்திற்கமைய பரிந்துரைகளை முன்வைப்பதற்கான ஆலோசனை சபை அடுத்தவாரம் கூடுகிறது!
இலங்கையில் தேசிய ஐக்கியத்தை உறுதிப்படுத்த செயலகம் – சட்டமூல வரைவு நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக விரைவ...