இலங்கையில் தேசிய ஐக்கியத்தை உறுதிப்படுத்த செயலகம் – சட்டமூல வரைவு நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிப்பு!

Sunday, October 1st, 2023

இலங்கையில் தேசிய ஐக்கியத்தை உறுதிப்படுத்துவதற்காக தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயலகம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான சட்டமூல வரைவு நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த புதிய சட்டமூல வரைவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தாலை நீதி,சிறைச்சாலைகள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கடந்த 25 ஆம் திகதி வெளியிட்டுள்ளார்.

அடையாளத்தை பாதுகாத்து அனைத்து குடிமக்களுக்கும் பொருளாதா, சமூக, காலாசார மற்றும் அரசியல் துறைகளில் சம வாய்ப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் பன்முகத்தன்மைக்கு மதிப்பளிக்கவும், அனைத்து சமூகங்களின் இணக்கப்பாடு, ஐக்கியத்துடன் சகவாழ்வுடன் கூடிய சமூகத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த செயலகம் ஏற்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

பல்வேறு சமூகங்களுக்கு இடையிலான முறுகல்களையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்தும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்காக செயற்படும் ஆர்வமுள்ள தரப்பினருக்கு ஆதரவளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கத்திற்கு பரிந்துரைப்பது இந்த செயலகத்தின் நோக்கங்களில் ஒன்று எனவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: