நாட்டின் பாதுகாப்பு உறுதியாக உள்ளது ! கருணாசேன ஹெட்டியாராச்சி!

Thursday, March 24th, 2016

இலங்கையின் தேசிய பாதுகாப்பில் எவரும் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் முகம்கொடுக்கும் வகையில் பாதுகாப்புபடையினர் தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பும் போதிய அளவு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளதுடன் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தாம் முழுமையான உத்தரவாதம் வழங்குவதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியிருந்தார்.

பெல்ஜியத்தில் மேற்கொள்ளப்பட்ட இருவேறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் சார்பில் தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் சர்வதேச பயங்கரவாத குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய கடந்த டிசம்பர் மாதம் முதல் விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: