இந்திய பிரதமர் நரேந்திர மோடி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு!

Saturday, May 14th, 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பு நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினை, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து உபசாரம் ஒன்றிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மத்திய பிரதேசத்தில் இடம்பெறும் கும்பமேளா நிறைவு விழாவிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை, சாஞ்சி பகுதிக்கு செல்லவுள்ள ஜனாதிபதி அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள அநாகரிக தர்மபாலவின் உருவச் சிலையையும் திறந்து வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts: