வடக்கு – கிழக்கு மக்களுக்காக 1,785 சிறு தொழில் முயற்சிகள் – தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர்!

Monday, March 6th, 2017

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு 1,785 சிறிய தொழில் முயற்சிகள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் அனுப்பப்பட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் உள்ளதாவது,

போரால் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களினது சமூக பொருளாதார மட்டத்தை உயர்த்தி வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் பிரதேச ரீதியாக பின்தங்கிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் பிரதேச வேறுபாடுகளைக் குறைப்பதே சிறிய தொழில் முயற்சிகள் கருத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய ஓருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சர் என்ற அடிப்படையில் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைவாக போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் 1,785 சிறய தொழில் முயற்சிகளை, கிராமங்களை மையமாகக் கொண்ட தொழில் முயற்சிகளை முன்னெடுக்கும் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது இந்தத் திட்டத்தின் கீழ் சிறு தொழில் முயற்சிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கான நிதியின் ஒரு பகுதி சலுகை அடிப்படையிலான கடனாக பிராந்திய வங்கி மற்றும் சனச வங்கியூடாக வழங்கப்படும். கருத்திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுக் கிரயம் 446 மில்லியன் ரூபாவாகும். ஒவ்வொரு தொழில் முயற்சிக்கும் 2இலட்சத்து 50அயிரம் ரூபாவுக்கும் மேற்படாத நிதியைப் பெறுவதற்கு வசதி செய்து கொடுக்கப்படும். ஒவ்வொரு சிறுதொழில் முயற்சியினதும் மதிப்பிடப்பட்ட உதவு தொகையில் 25 வீதம் நன்கொடையாக வழங்கப்படுவதுடன் எஞ்சிய 75வீதமும் சலுகைக் கடனுக்கான வட்டித் தொகை அரசால் பொறுப்பேற்கப்படும்.

முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் தலைமை வகிக்கப்படும் தேசிய ஓருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தால் இந்தக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றுள்ளது,

Related posts: