கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 92,442 ஆக அதிகரிப்பு!
Wednesday, March 31st, 2021
இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 139 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 442 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 89 ஆயிரத்து 90 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 786 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேநேரம், நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 566 ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அரசாங்க நிறுவனங்களில் விரைவில் மாற்றம்?
1,000 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு - அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!
செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 18 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் -தேர்தல்கள் ஆணைக்குழு த...
|
|
|


