நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Tuesday, September 21st, 2021

நாட்டின் சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் , வட மேல்மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts:

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில் - ஐவர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா ...
ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தயார் – பெருந்தோட்டக் க...
சீன இராணுவ உதவி திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சுக்கு வெடிகுண்டுகளை செயழிலக்கச் செய்யும் இயந்திரங்...