அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

Monday, March 9th, 2020

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பருவப்பெயர்ச்சி மழை எதிர்பார்க்கப்படும் காலம் வரை இந்த வானிலை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தொடர்ந்தும் கடும் வெயிலில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

வெப்ப அழுத்தம் என்று மருத்துவத்தில் கூறப்படும் இந்த வானிலையின்போது கட்டட நிர்மாணத்தொழிலாளர்கள், போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மேலதிக் கவனத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர்.

இதனை பொருட்படுத்தாது நடந்துக்கொள்வோருக்கு வழமையான விதத்தை காட்டிலும் தசைபிடிப்பு போன்ற நிலைமைகள் ஏற்படலாம்.

இறுதியில் வெப்ப பக்கவாதம் ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும் நிலை கூட ஏற்படலாம் என்று சுகாதார அமைச்சின் மருத்துவர் இனோகா சுரவீர தெரிவித்துள்ளார்.

Related posts: