நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Friday, March 11th, 2022

நாட்டில் மாலை அல்லது இரவு வேளையில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் எனவும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில், மழையற்ற வானிலை நிலவும். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூய அபாயத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts: