நாட்டின் நெருக்கடி நிலைமை தொடர்பில் நாடாளுமன்றில் இன்றும் நாளையும் நாள் விவாதம்!

Wednesday, April 6th, 2022

நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமை  தொடர்பில் இன்றும், நாளையும் நாடாளுமன்றில் விசேட விவாதத்தை நடத்த கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகியுள்ள நிலையில் நாடாளுமன்ற செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாத நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.

நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வுகாண நாடாளுமன்றத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் உட்பட நர்தளுமன்ற உறுப்பினர்களான ரணில் விக்ரமசிங்க, அனுர குமார திஸாநாயக்க ஆகியோர் சபாநாயகரிடம் கூட்டாக வலியுறுத்தினர்.

அதற்கமைய நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள  நெருக்கடி நிலைமை குறித்து இன்றும்,நாளையும் இருநாள் விவாதம் இடம்பெறும்.

மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு ஒருவார காலத்திற்குள் தீர்வு காணும் வகையில் சிறந்த தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும் என கட்சி தலைவர் கூட்டத்தில்  நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார உட்பட கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாத்தை  நாளை மறுதினம் காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை நடத்த தீர்மானிக்கப்பட்டள்ளது.

சபாநாயகர் தலைமையில் கடந்த 1 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பிலான தெரிவு குழு கூட்டத்தின் போது இன்றும் நாளையும் மிகைவரி சட்டமூலம் (இரண்டாம் வாசிப்பு) துறைமுகம் மற்றும் விமான அபிவிருத்தி வரிச்சட்டத்தின் கீழ் நிதியமைச்சரினால் 2022.01.06ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி  மற்றும் 2022.01.11ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டது.

இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிமுதல் இரவு 08 மணி வரை இடம்பெறவுள்ளது. வாய்மொழி மூலமான கேள்விகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: