42,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி

Monday, February 6th, 2017

நாட்டில் அரிசியின் விலையை ஸ்திரமாகப் பேணுவதற்கு ஏற்றவகையில், போதுமானளவு அரிசியினை இறக்குமதி செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது..

சுமார் 42,000 மெட்ரிக் தொன் அரிசி தனியார்த்துறையினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன குறிப்பிட்டார்.

நடைமுறையிலுள்ள அரிசி விலைகள் தொடர்பில் நுகர்வோர் விவகார சபை கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும், அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையிடமிருந்து நாளை பரிந்துரைகளைப் பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

rice

Related posts: