நன்றி கெட்ட தமிழினம் அவப் பெயரை மாற்றும் வகையில் எம்முடைய வாக்களிப்பு அமைய வேண்டும்: தென்மாராட்சி இளைஞரணித் தலைவர் மதுஸன் அறைகூவல் !

தென்மாராட்சி இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கருத்து தெரிவித்த மதுஸன், கடந்த காலங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மூலம் வேலைவாய்ப்புக்களையும் அபிவிருத்தி திட்டங்களையும் பெற்றுக் கொண்டவர்கள் தேர்தல்களில் அவர் சார்ந்த கட்சிக்கு ஆதரவளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மீது சுமத்தப்பட்டு வருகிறது.
குறித்த அவப் பெயரை நீக்கும் வகையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
முன்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட உள்ளூராட்சி மன்றஉறுப்பினர்கள், நிர்வாகபொறுப்பாளர்கள், முக்கியஸ்தர்கள் போன்றோருடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது நாடாளுமன்ற தேர்தல் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|