டெங்கு நோயிதாக்கம் – இரு மாதங்களில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Monday, July 30th, 2018

கடந்த இரு மாதங்களில் டெங்கு நோயினால் 9 ஆயிரத்து 652 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 30 ஆயிரத்து 786 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இந்த வருடம் குறைவடைந்துள்ளதாகவும் டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் 33.8 வீதமானவர்கள் மேல் மாகாணத்தை சேர்;ந்தவர்கள் எனவும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே எதிர்வரும் உயர்தரப் பரீட்சைகளுக்கு முன்னதாக பரீட்சைகள் இடம்பெறும் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts: