10 வீத பெண்கள் தெரிவு – மஹிந்த தேசப்பிரிய!

Friday, February 23rd, 2018

நடந்துமுடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 10 வீதமான பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 1.9 வீதமான பெண்கள் தெரிவாகியிருந்தனர். எனினும், இம்முறைத் தேர்தலில் தொகுதிவாரியாக தெரிவான பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் பத்து வீதம் வரையில் உயர்வடைந்துள்ளது.

தொகுதிவாரி அடிப்படையில் மொத்தமாக 5092 பேர் தெரிவாகியுள்ளதுடன் இதில் 535 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதிவாரி அடிப்படையில் பெண் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ள நிலையில் விகிசாதார முறையிலும் பெண் உறுப்பினர்களை தெரிவு செய்து, உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதமாக பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தேர்தல் சட்டத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற அதிபர் நியமனங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிம...
நட்புறவை முன்னெடுத்து நாட்டை அபிவிருத்தி செய்வதே ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நோக்கம்!
குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியர்கள்தான் இலங்கை வரலாற்றில் எப்போதும் இருந்திருக்கிறார்கள் - அமைச்சர் ஜோ...