2021 ஆம் ஆண்டுக்கான. உயரதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்படும் சாத்தியம் – ஆராயப்படுவதாக கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, March 8th, 2021

திட்டமிடப்பட்டபடி பாடத்திட்டத்தை நிறைவுசெய்ய முடியாதுள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயரதரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்திற்கான புலமைப்பரிசில் பரீட்சையை தாமதப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று பரீட்சைகள் திணைக்களம், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்கள் இடையே நடைபெற்றதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இதுவரை உள்ளடக்கப்பட்ட பாடத்திட்டங்கள் மற்றும் பிரச்சினை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பாடசாலை மட்டத்தில் மேலதிக தகவல்களை சேகரித்த பின்னர் இறுதி முடிவு எட்டப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

க.பொ.த. உயரதரப் பரீட்சை மற்றும் தரம் 5 இற்கான புலமைப்பரிசில் பரீட்சையை என்பன ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்றுவரும் நிலையில் மாற்றம் குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அறிவை ஜனநாயகப் படுத்துகின்ற பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்: பேராசிரியர் சின்னத்தம...
கொரோனா தொற்றுக்கு மத்தியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு - சுகாதார தரப்பினர் எச்சரிக...
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம் - பருவபெயர்ச்சி ...