தேசிய மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் – ஆகஸ்ட் 23 வரை விண்ணப்பிக்கலாம்! 

Thursday, August 2nd, 2018

நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் பாடசாலை மாணவர் ஆலோசனைக்காக பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் ஆசிரியர்களாக நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.

பாடசலைகளை அடிப்படையாகக் கொண்ட முறையின் கீழ் ஆசிரியர் நியமனம் இடம்பெறுமென்பதால் நியமனம் செய்யப்பட்டு 5 வருடங்களுக்கு எவ்வித இடமாற்றமும் கோரமுடியாது.

தமிழ்மொழி மூலம், சிங்கள மொழி மூலம் இப்பட்டதாரி ஆசிரியர் நியமனம் இடம்பெறவுள்ளது. தமிழ் மொழி மூலம் மேல் மாகாணம், மத்திய மாகாணம், தென் மாகாணம், வட மாகாணம், கிழக்கு மாகாணம், வடமேல் மாகாணம், ஊவா மாகாணம் ஆகிய மாகாணங்களில் உள்ள தேசிய பாடசாலைகளில் வெற்றிடம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றினால் வழங்கப்பட்ட மனோவியல், சமூகவியல் பாடங்களை பிரதான பாடமாகக் கொண்டவர்கள் அல்லது பல்கலைக்கழக பட்டத்துடன் ஆலோசனை தொடர்பான ஒரு வருட டிப்ளோமா பாடநெறியை பயின்றவர்களும் மேற்படி ஆசிரியர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.

போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் இடம்பெறவுள்ள இந்நியமனம் தொடர்பான விண்ணப்பங்களை ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரை பரீட்சை ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்க முடியுமென கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.

Related posts: