துவிச்சக்கர வண்டி விற்பனை சடுதியாக வீழ்ச்சி – துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் கவலை!

Tuesday, August 16th, 2022

துவிச்சக்கர வண்டிகளின் விற்பனைகள் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன. துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் மற்றும் உதிரிபாக விற்பனையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் ரிஸ்னி இஸ்மத் தெரிவித்துள்ளார்.

துவிச்சக்கர வண்டிகளின் விற்பனைகள் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக அதன் விலைகளும் வெகுவாக குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக துவிச்சக்கர வண்டிகளுக்கான கேள்வி அதிகரித்து காணப்பட்டது.

இதன்காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்திருந்தததுடன் அதற்கான தட்டுப்பாடுகளும் ஏற்பட்டிருந்தன.

தற்போது, தட்டுப்பாடு இன்றி எரிபொருள் கிடைக்கின்றமையால் துவிச்சக்கர வண்டிகளின் பயன்பாடு குறைடைந்துள்ளதாக துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் மற்றும் உதிரிபாக விற்பனையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

முறிகள் விநியோகத்துடன் நேரடி தொடர்புடைய தரப்பிடமிருந்து நட்டத்தை மீள அறவிட முடியும் - சட்டமா அதிபர் ...
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்குப் பொருளாதார ரீதியான அசௌகரியங்கள் அதிகரித்தால், ஏழைகள் வீதிக்கு இறங்...
பேச்சுவார்த்தைகளின் போது வங்கிக் கட்டமைப்பின் நிலைத் தன்மை தொடர்பிலேயே அதிக அவதானம் செலுத்தப்பட்டது ...