தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் 28 பேர் கைது !

Tuesday, April 23rd, 2019

நாட்டின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்கதல்கள் தொடர்பில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 290 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின், சடலங்கள் தொடர்பான பிரேத, பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு, சடலங்களை  உறவினர்களிடம் கையளிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்ப்பட்டுள்ளது

Related posts: