தரம் 2 முதல் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு புதிய மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

Tuesday, April 25th, 2023

நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் தரம் 2 முதல் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு புதிய மாணவர்களை இணைக்க விரும்புவோர், விண்ணப்பங்களை பதிவு தபாலில் அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், பாடசாலைகளில் தரம் 06 இல் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு இது பொருந்தாது எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் அடிப்படையில், பாடசாலைகளில் இருக்கக்கூடிய வெற்றிடங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை பாடசாலைகள் முன்னெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இனிவரும் நாட்களில் அரச பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான கடிதங்கள் எவையும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட மாட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts: