மெனிங் பொதுச்சந்தைக்கு பதிலாக புதிய பொதுச்சந்தை – பஷில் ராஜபகக்ஷ தெரிவிப்பு!

Wednesday, November 11th, 2020

விவசாயிகளின் உற்பத்திகள் பயன் பெறாத வகையில் வீண்விரமயாவதற்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது. மெனிங் பொதுச்சந்தைக்கு பதிலாக பேலியகொட பகுதியில் புதிய பொதுச்சந்தை நிர்மாணிக்கப்படும் என பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

மெனிங் மொத்த விற்பனை மத்திய நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதனால் விவசாயிகள் பெரும். நெருக்கடியினை எதிர்க் கொண்டுள்ளார்கள்.

விவசாயிகளின் மரகறி உற்பத்திகளை விற்பனை செய்துக் கொள்வதற்கு பேலியகொட பகுதியில் புதிதாக விற்பனை மத்திய நிலையத்தை அமைக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான காணியில் சுகாதார வழிமுறைகளை. பின்பற்றி விரைவாக விற்பனை மத்திய நிலையத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மெனிங் மொத்த விற்பனை மத்திய நிலையம் மூடப்பட்டதனால் விவசாயிகள் பாரிய நெருக்கடியினை எதிர்க் கொண்டுள்ளார்கள்.

ஒரு நாளைக்கு மாத்திரம் 150 தொடக்கம் 200 வரையிலான லொறிகள் பல சிரமங்களுக்கு மத்தியில் பிற விற்பனை நிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் மரகறிகளின் ஒரு கிலோவையேனும் பயன் பெறாத வகையில் வீண்விரயமாக அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: