பல மணிநேர போராட்டத்திற்கு பின் எவர் கிரீன் கப்பல் மீட்டெடுப்பு!
Monday, March 29th, 2021
எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி மாட்டிக்கொண்ட மிகப்பெரிய சரக்கு கப்பல் வெற்றிகரமாக மீண்டும் மிதக்க வைக்கப்பட்டது.
சரக்கு போக்குவரத்து பாதைகளில் உலகின் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் சூயஸ் கால்வாயின் குறுக்கே கடந்த செவ்வாய்க்கிழமைமுதல் எவர் கிவன் நிறுவனத்தின் எவர் கிவன் என்ற மிகப்பெரிய சரக்குக் கப்பல் தரைதட்டி மாட்டிக் கொண்டது.
இதனால் உலகளவில் சரக்குப் போக்குவரத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டது மற்றும் உலகளாவிய வர்த்தகம் இழப்புகளுக்கு ஆளானது.
அந்த கப்பலை மீண்டும் மிதக்க வைப்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
கப்பலை விடுவிக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வந்த மீட்புக்குழுவினர் திங்கட்கிழமை எவர் கிவன் கப்பலை மீண்டும் மிதக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சமாதானம் முன்னிறுத்தி யாழ்ப்பாணத்தில் தேசிய விளையாட்டு விழா!
மியன்மார் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் போட்டியிடத் தடை!
ஜுன் மாதத்திற்குள் கொரோனகா தொற்றின் தாக்கம் உச்சம்பெறும் - சுகாதார தரப்பு விடுத்துள்ள கடும் எச்சரிக...
|
|
|
பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னர் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!
தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 70 இலட்சத்தைக் கடந்தது - தொற்று நோயியல் பிரிவு அறிவிப்...
அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசே...


