மருத்துவர்களினால் அரசாங்கத்திற்கு 20 கோடி ரூபா நஷ்டம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Saturday, May 20th, 2023

பல்வேறு பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள 215 மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பாத நிலையில் அரசாங்கத்திற்கு சுமார் 20 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டில் 169 விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்கள் பயிற்சிக்காக சென்றுள்ளதுடன், இவ்வருடம் இதுவரையில் 46 விசேட வைத்தியர்களும் வைத்தியர்களும் சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

இவர்களை அழைத்து வரவோ அல்லது பணம் வசூலிக்கவோ ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இலங்கையில் வைத்தியர் ஒருவரைப் பயிற்றுவிக்க சுமார் 6 இலட்சம் ரூபாவும், விசேட வைத்தியரைப் பயிற்றுவிக்க சுமார் இரண்டு கோடி ரூபாவும் செலவாகும் என சுகாதாரத் திணைக்களங்கள் தெரிவிக்கின்றன.

இலவசக் கல்வியை கற்ற பின்னர், சேவையை விட்டுவிட்டு அரசாங்க செலவில் பயிற்சிக்கு சென்ற பின்னர் பணிக்கு திரும்பாமல் இருப்பதால் பாரிய அவல நிலையை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: