நாட்டில் தொற்றா நோய்கள் காரணமாக 65 வீதமானோர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சு!

Monday, August 21st, 2017

நாட்டில் தொற்றா நோய் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 65 வீதமாக காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நீரிழிவு , இருதய நோய் , சுவாச நோய் மற்றும் உயர் குருதி அமுக்கம் போன்ற நோய்கள் காரணமாக உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுனர் டாக்டர் ஷாந்தி குணவர்தன தெரிவித்தார்.

மோசமான சுகாதார பழக்கம் மற்றும் தவறான உணவு முறையே இதற்கான காணரமாகும்.இதற்கு முன்னர் தொற்று நோய் காரணமாகவே 65 வீதமானவர்கள் உயிரிழந்துள்ளதாக விசேட வைத்திய நிபுனர் டாக்டர் ஷாந்தி குணவர்தன தெரிவித்தார்.உடல் பருமன் அதிகரிப்பதும் அதிக நோய்களுக்கு காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டார்

Related posts: