தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மகிழ்ச்சியளிக்கிறது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, October 22nd, 2022

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவினரை தீபாவளி தினத்தன்று விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கட்டம் கட்டமாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ ஆகியோருக்கு தமிழ் மக்கள் சார்பில் தனது நன்றியைத் தெரிவிப்பதாக அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம் ரணில் விக்கிரமசிங்கவை நாட்டின் ஜனாதிபதியாக மாற்றுவதற்காக தாம் வெளிப்படையாக செயற்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமாக பரிசீலிப்பதாக உறுதியளித்திருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை கட்டம் கட்டமாக நிறைவேற்றி வருகின்ற நிலையில், அவருக்கு தொடர்ந்தும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: