மீண்டும் வடக்கில் புத்துயிர் பெறும் புடைவைக் கைத்தொழில் !

Sunday, April 29th, 2018

வடக்கு மாகாணத்தில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தேக்க நிலையிலுள்ள புடைவைக் கைத்தொழிலுக்கு புத்துயிர் கொடுத்து மீண்டும் புடைவை உற்பத்தியை மேம்படுத்த உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் போர் ஏற்பட்ட காலத்தின் பின்னர் புடைவை உற்பத்திக்கான நூல் பெறுவதில் ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் உள்ளுர் உற்பத்திப் பொருள்களுக்குரிய சந்தை வாய்ப்புகள் இன்மை காரணமாக புடைவைக் கைத்தொழிலில் ஈடுபட்டிருந்த பலர் தொழில்களைக் கைவிட்டு வேறு வேலைகளுக்குச் சென்றனர். இதனால் புடைவைக் கைத்தறி உபகரணங்கள் பல இடங்களில் மூடி வைக்கப்பட்டுள்ளமையைக் காண முடிகிறது.

இந்த நிலையில் நாட்டில் புடைவைக் கைத்தொழிலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வேலைத்திட்டமாக மாற்றுவதற்கு பிரதேச செயலகம், புள்ளி விவரத் திணைக்களம் ஆகியவற்றுடன் தொழில் மற்றும் கைத்தொழில் திணைக்களம் புடைவைக் கைத்தொழில் தொடர்பான விவரங்களைச் சேகரிக்கவுள்ளதெனத் தெரிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக கிராம அலுவலர்கள் மூலம் ஆரம்பத் தகவல்களைப் பெற்று இரண்டாம் கட்டமாக புள்ளிவிவர அலுவலர் மற்றும் அபிவிருத்தி அலுவலர் ஆகியோர் ஊடாக வினாக்கொத்து மூலம் விவரங்கள் சேகரிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தால் பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னர் கைத்தறிகள் மூலமும் இயந்திர கைத்தறி நிலையங்கள் மூலமும் பெருமளவு புடைவை உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றுக்கு போதிய சந்தை வாய்ப்புகள் கிடைத்தன. பின்னர் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புடைவை வகைகள் பெருமளவில் சந்தைக்கு கொண்டு வரப்பட்டதால் கைத்தறி புடைவைகளுக்கு மவுசின்றி சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. என்று கைத்தறி புடைவை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Related posts: