தந்தையை பழிவாங்கவே சிறுமி ரெஜினா கொலை செய்யப்படுள்ளார்  – சுழிபுரம் சிறுமி கொலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி செய்தி!

Wednesday, June 27th, 2018

வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியில் கழுத்து நெரித்து கொலை செய்யபட்டு கிணற்றில் வீசப்பட்ட சிறுமி ரெஜினா அவரது தந்தையை பழிதீர்க்கும் நோக்கிலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர் என விசாராணைகளில் தெரியவந்தள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுழிபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து ரெஜினா என்ற ஆறு வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த கொலைக்கு சிறுமியின் சிறிய தந்தை உள்ளிட்ட நால்வர் துணைபோயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சம்பவம் தொடர்பான விசாரணையின் பின் சிறுமியின் சீருடை மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை பிரதான சந்தேகநபர் அடையாளம் காட்டியுள்ளார். இதனையடுத்து பாடசாலைச் சீருடை மீட்கப்பட்டது.எனினும் தோடுகளை மறைத்து வைத்த இடத்தை சந்தேகநபரால் அடையாளம் காட்டமுடியவில்லை. சந்தேகநபர்கள் கஞ்சா போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள்.

சந்தேகநபர்கள் 19 தொடக்கம் 23 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் பனைகளில் ஏறி திருட்டுத்தனமாக கள்ளு இறக்கி குடித்துள்ளனர். இதனை கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை அறிந்துள்ளார். இதனையடுத்து சந்தேகநபர்களில் இருவரை அடித்து கண்டித்திருந்தார். இந்த சம்பவம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சிறுமியின் தந்தையை பழிதீர்க்கவேண்டும் என்ற வெறியோடு பிரதான சந்தேகநபர் இருந்துள்ளார். இதற்காக சிறுமி ரெஜினாவை கொலை செய்துள்ளனர். இதற்கு சிறுமியின் சிறிய தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார்.

கொலையை திசை திருப்ப தோடுகளை எடுத்ததுடன் சீருடையையும் களைந்துவிட்டு சடலத்தை கிணற்றுக்குள் போட்டுள்ளனர்” என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: