சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் தலைமையில் ‘நதிகளைப் பாதுகாப்போம்’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

Monday, March 22nd, 2021

இன்று சர்வதேச நீர் தினமாகும். இதற்காக இன்று நாடு பூராகவும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் நாட்டின் நதி அமைப்பைப் பாதுகாக்கும் நோக்குடன் நடைமுறைப்படுத்தும், ‘நதிகளைப் பாதுகாப்போம்’ என்ற தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் புனித பூமியின் மாணிக்க கங்கைக்கு அருகாமையில் இன்றுகாலை 10 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தேசிய சுற்றாடல் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு, சுற்றாடல் அமைச்சினால் இலங்கையிலுள்ள நதிகள் தொடர்பாக விசேட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் நதிகளை மாசுப்படுத்தும் 10 ஆயிரத்து 377 விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 70 நதி கரை அரிப்பு இடம்பெறும் இடங்களும், 63 நதி கரைகளை கைப்பற்றப்படும் இடங்களும், 52 சட்ட விரோதமாக மணல் மற்றும் இரத்தினகல் அகழ்வு இடம்பெறும் இடங்களும், அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 31 நகர கழிவை கொட்டும் இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக இரத்தின கல் உள்ள பிரதேசங்களில் அடிக்கடி தண்ணிரை பிரித்தெடுக்கும் இடங்கள் 23 ம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இயற்கை கழிவை கொட்டும் இடங்கள் 7ம், சட்ட விரோத கட்டுமானங்கள் இடம்பெறும் இடம் 10ம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றாடல் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாயம் காணப்பட்டுள்ள சுற்றாடல் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதே நதிகளை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என்றுமு; அவ்வமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சுற்றாடல் அமைச்சும் மத்திய சுற்றாடல் அதிகார சபையும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்திற்காக வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: