பரீட்சை எழுதிவிட்டு திரும்பிய மூன்று மாணவர்கள் மீது கத்தி குத்து!
Saturday, August 13th, 2016
தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மூன்று மாணவர்கள் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
கண்டி அக்குரஸ்ஸ பேருந்து நிலையத்தில் வைத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கத்தி குத்துக்கு இலக்கான மாணவர்கள் மூன்று பேரும் அக்குரஸ்ஸ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொடபிட்டிய தேசிய பாடசாலை மாணவர்கள் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
தெற்காசியாவின் மற்றுமொரு அதிசயம் கொழும்பில்!
சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுங்கள் - பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் அமைச்சரவை இணைப்ப...
சர்வதேச நாணய நிதியத்துடனான அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தை இவ்வாரத்துக்குள் ஆரம்பம் – நிதி அமைச்சர்...
|
|
|
முதல் 10 நாட்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரிடமிருந்து வைரஸ் பரவக் கூடிய அபாயம் அதிகம் உள்ளது - இர...
விசாகப் பூரணை தினத்தை முன்னிட்டு 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு - சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிப்ப...
அபுதாபி - கட்டுநாயக்கவுக்கு இடையிலான நேரடி விமான சேவை விரைவில் - அபுதாபியின் ஏர் அரேபியா விமான சேவை ...


