தங்கம் கடத்திவந்த 3 பெண்கள் கைது!

Monday, May 23rd, 2016

டுபாயிலிருந்து 6 கோடி ரூபா பெறுமதியான தங்கங்களை இலங்கைக்கு கடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த 3 பெண்கள் சுங்கத்திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 3 பெண்களும் டுபாய் நாட்டுக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இன்று காலை 9 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை , குறித்த பெண்கள் 10 கிலோ 500 கிராம் நிறையுடைய தங்கங்களை கடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: