அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை தற்காலிக நீக்கம்!

Wednesday, August 16th, 2017

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயத்தை தற்காலிகமாக நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் அரிசி இறக்குமதி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதையடுத்து அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை தற்காலிகமாக நீக்குவது என்றும் அதன் மூலம் கிடைக்கும் பலாபலன்களைப் பார்த்து சில மாதங்களின் பின்னர் உறுதியான முடிவு எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமையினால் அரிசியை இறக்குமதி செய்பவர்களின் தொகை குறைவடைந்துள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்தே குறித்த இந்த விலை நிர்ணயத்தை தற்காலிகமாக நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts:


வாகனங்களில் எதிரொளிப்பான் பொருத்தி விபத்துக்களைத் தவிர்க்கவும்: யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்...
நல்லாட்சியில் இடம்பெற்ற விசாரணைகளின் பெறுபெறுகள் அனைத்தும் அரசியல் அழுத்தங்களுடன் இடம்பெற்றன – முன்ன...
கட்டாய முகக்கவசம் அணியும் சட்டம் இன்றுமுதல் அமுல் : மீறினால் பிடி ஆணை உத்தரவு இல்லாமல் கைது செய்யப...