வேலணை ஐயநார் வித்தியாலயத்தில் காள்கோள் விழா!
Wednesday, January 11th, 2017
2017 ஆம் வருடத்திற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையான காள் கோள் விழா இன்று நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன் ஒரு அங்கமாக இன்று வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலையத்தில் பாடசாலையின் அதிபர் சுதர்சினி ஜோய்ஸ் நியூட்டன் தலைமையில் வெகு விமரிசையாக குறித்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் குறித்த பகுதி தரம் ஒன்றைச் சேர்ந்த பல மாணவர்கள் ஏனைய மாணவர்களால் வரவேற்கப்பட்டதுடன் சிறப்பு நிகழ்வுகள் பலவும் நடைபெற்றன.
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் தரத்திற்கான புதிய மாணவர்கள் வரவேற்கும் நிகழ்வு இன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Related posts:
பரிசை நம்பி 20 இலட்சத்தை பறிகொடுத்த யுவதி!
படையினர் வெளிநாடு செல்ல அறிவிக்க வேண்டியதில்லை - குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்!
அச்சமடையத் தேவையில்லை – பெற்றோருக்கு பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு!
|
|
|


