பொதுமக்களும் சுகாதார பாதுகாப்பு தொடர்பில், அவதானம் செலுத்த வேண்டும் – நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை கோரிக்கை!

Wednesday, August 18th, 2021

கொரோனா பரவல் நிலைக்கு மத்தியில், தமது உத்தியோகத்தர்கள், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு செல்லும்போது, அவர்களும், பொதுமக்களும் சுகாதார பாதுகாப்பு தொடர்பில், அவதானம் செலுத்த வேண்டும் என நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை கோரியுள்ளது.

நீர்க்கட்டண பட்டியலை வழங்க வரும் உத்தியோகத்தரின் கடமைகளுக்கு இடமளித்து, பொதுமக்கள் 2 மீற்றர் சமூக இடைவெளியைப் பேண வேண்டும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், கட்டணப் பட்டியல் தொடர்பில் தகவல் அறிந்துக்கொள்ள வேண்டுமாயின், அவரிடம் நேரடியாக வினவுவதைத் தவிர்த்து, 1939 என்ற அழைப்பு இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும், நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை பொதுமக்களை கோரியுள்ளது.

அவ்வாறின்றேல், நீர் கட்டணப் பட்டியலில் உள்ள கணக்கு இலக்கத்தை, 0719 399 999 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு குறுந்தகவலாக அனுப்ப வேண்டும்.

இதேநேரம், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள வீடுகளில், மானிவாசிப்பாளர் வருவதற்கு முன்னர், நீர் மானி வாசிப்பின் தற்போதைய அளவீட்டு நிலையை, அவர் அறிந்துகொள்ளும்வகையில் காட்சிப்படுத்துமாறும் நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை பொதுமக்களை கோரியுள்ளது.

000

Related posts: