யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படுகிறது வெளிமாவட்டங்களிற்கான தனியார் பேருந்து நிலையம்!
Sunday, January 24th, 2021
யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில் அமைக்கப்படுள்ள நெடுந்தூர தனியார் பேருந்து நிலையம் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
வெளிமாவட்டங்களிற்கு செல்லும் தனியார் பேருந்துகள் தரித்து நிற்பதற்கு உரிய இடம் இல்லாமல் இருந்துவந்த நிலையில் அதனை நிவர்த்தி செய்யும்வகையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சில வருடங்களாக மின்சார நிலைய வீதியின் வைத்தியசாலை பின் பகுதியிலேயே வெளிமாவட்டங்களிற்கான தனியார் பேருந்துகள் தரித்திருந்து சேவையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நெல் விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதமே அரிசி விலை அதிகரிப்புக்கு காரணம்!
பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் பணி ஆரம்பம்!
கல்வி சீர்திருத்த செயற்பாடு நல்ல ஒரு பிரஜையை உருவாக்குவதாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக...
|
|
|


