ஜூன் 2 முதல் 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்க ஏற்பாடு – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Saturday, May 29th, 2021

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையால், எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் மீண்டும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக 30 மில்லியன் ரூபாவினை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் மூன்று கட்டங்களின் அடிப்படையில், 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

5000 ரூபாவிற்கும் குறைந்த அளவில் அரச கொடுப்பனவை பெறுவோருக்கு, அந்த கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் அரசாங்கத்தின் நிவாரண திட்டத்திற்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ளவர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாழ்வாதாரத்தை இழந்து வருமானம் இல்லாது போயுள்ளவர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: