குடிநீர் பாதுகாப்பை முன்னெடுக்க நாம் தவறி வருகின்றோம் – தேசிய உணவு உற்பத்திகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் – எச்சரிக்கிறார் சமல் ராஜபக்ச!

Friday, November 27th, 2020

உலகில் இரண்டு பில்லியன் மக்கள் அதியுச்ச நீர் தட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருகின்றனர். உலகில் ஏற்பட்டு வருகின்ற அனர்த்தங்கள் காரணமாக 2030 ஆம் ஆண்டில் 700 மில்லியன் மக்கள் அகதிகளாவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கும் இந்த அச்சுறுத்தல் உள்ளது. உலக வெப்பமாதல் நிலைமைகளுக்கு நாமும் முகங்கொடுத்து வருகின்றோம். இதில் உலகிலுள்ள 180 நாடுகளில் அதிக அச்சுறுத்தல் கொண்ட பத்து நாடுகளில் இலங்கையும் உள்ளது.

2020 ஆம் ஆண்டில் உலகில் எச்சரிக்கையான காலநிலை கொண்ட நாடுகளின் பட்டியலில் 6 ஆவது இடத்தில் இலங்கை உள்ளது.

இலங்கையில் நீர் நிலைகளை பாதுகாத்து அதன் மூலமாக குடிநீர் பாதுகாப்பை முன்னெடுக்க நாம் தவறி வருகின்றோம் என்பதை கூறியாக வேண்டும்.

அதுமட்டுமல்ல இன்று உலகளவில் பரவிக்கொண்டுள்ள கொவிட் -19 வைரஸ் காரணமாக முறையான உணவுகள் கிடைக்காது உலகில் 135 மில்லியன் மக்கள் தவித்து வருவதாக உலக உணவு ஸ்தாபனம் தெரிவிக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் உணவு உற்பத்தியில் நெருக்கடிகளை சந்திக்கும் அபாயமுள்ள நாடுகளில் இலங்கையும் உள்ளதாக உலக உணவு ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எனவே இப்போதே நாம் தேசிய உணவு உற்பத்திகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இல்லையேல் இலங்கையில் 25 வீதமானவர்கள் உயரிய உணவு பற்றாகுறைக்கு முகங்கொடுக்க வேண்டிவரும், அதாவது இலங்கையின் சனத்தொகையில் 4.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவர் என எச்சரிக்கப்படுகின்றது.

எனவே எமது அரசாங்கம் நாட்டின் தேசிய உற்பத்தியில் விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

16 வகையான விதைகளை நாம் குறைந்த விலைகளில் விவசாயிகளுக்கு கொடுத்து சிறு உற்பத்திகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை நாமே பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அத்துடன் நெல் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

Related posts: