ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச – ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் இடையே விசேட சந்திப்பு – இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி!

Monday, October 25th, 2021

இலங்கையுடனான தனது ஒற்றுமையை மீண்டும் வலியுறுத்திய ஜப்பான், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.

ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் அகிரா சுகியாமா இன்று திங்கட்கிழமை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்திருந்தார்.

இதன்போது இலங்கையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஜப்பானிய அரசாங்கம் 600 ஆயிரம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை வழங்கியதற்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்திருந்தார்.

இதேவேளை இலங்கையுடன் மேலும் தொடர்பை ஏற்படுத்த விருப்பம் தெரிவித்த தூதுவர், ஜனாதிபதியின் தொடர்ச்சியான ஆதரவுக்கு அவர் நன்றியும் தெரிவித்திருந்’தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: