சூழல் வெப்பமடைவதனால் மன அழுத்தம் அதிகரிக்கும் – ராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட உளநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவிப்பு!

Sunday, August 20th, 2023

சூழல் வெப்பமடைவதனால் மன அழுத்தம் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சூழல் வெப்பமடைதல் அதிகரித்துச்செல்லும் நிலையில் மன அழுத்தமும் உக்கிரமடையும் நிலைமை அதிகரித்துச் செல்வதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட உளநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பத்துடனான காலநிலை தொடரும் போது, ஏற்கனவே நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உளநலம் மேலும் சிக்கலுக்குள்ளாகும் நிலை காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மருந்துகளை உட்கொள்வோர் இவ்வாறான அதிக வெப்பத்துடனான காலப்பகுதியில் அதிகளவு நீரை பருகுவது அத்தியாவசியமானதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: