இந்தியாவின் உதவியுடன் வடக்கு, கிழக்கில் நெடுஞ்சாலை!  

Friday, September 15th, 2017

அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்கின்றபோது காலாகாலம்மாற்றமடையாதவாறு தேசிய கொள்கையொன்றை வகுக்க வேண்டியதுஅவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இதைத்தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறைப்படுத்தப்படும் அதிவேக நெடுஞ்சாலைகள் நிர்மாணப் பணிகள், வீதி திருத்த வேலைகள் மற்றும் புதிய பாதைகளைஅமைத்தல் அவற்றின் நிதி நிலைமைகள் குறித்து ஜனாதிபதி இதன்போது  அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயிலிருந்து குருநாகல் வரையிலான பகுதி மற்றும் கடவத்தையிலிருந்து மீரிகமை வரையானபகுதியை 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் தெரிவித்தார்.

கடவத்தையிலிருந்து கெரவலப்பிட்டிய வரையிலான பகுதியின் நூற்றுக்கு ஐம்பது வீதமான நிர்மாண வேலைகள் இந்த வருடத்தில்முடிவடையவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்துஊடகங்களில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றி ஜனாதிபதி  அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.

திறந்த ஊடகக் கலந்துரையாடலின் மூலம் அல்லது ஊடகங்களுக்கு சரியான தகவல்களை வழங்கி முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களைவெளிப்படைத் தன்மையுடன் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீதி அபிவிருத்தியின் கீழ் வட மாகாண அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப்பணிகளுக்கானதிட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான கடனுதவியை வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்திலிருந்து இலகுவாக கொழும்புக்கு வந்து சேரக்கூடியவகையில் அதிவேக நெடுஞ்சாலை அல்லது உயர்தரத்துடன்கூடியநெடுஞ்சாலையை நிர்மாணிப்பது குறித்தும் திட்டமொன்றை விரைவாக தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

வீதி அபிவிருத்தி மற்றும் மேம்பாலங்கள் திட்டத்திற்காக தேசிய மற்றும் வெளிநாட்டு ஏற்பாடுகள் கிடைக்கும் முறை தொடர்பாக வினவியஜனாதிபதி, அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் காரணமாக காணிகளை இழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கைகளைத்துரிதப்படுத்துமாறும் ஆலோசனை வழங்கினார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையிலும் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையிலும் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக்கவனத்திற்கொண்டும் அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பது தொடர்பான திட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்சுட்டிக்காட்டினார்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் இணைந்த வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிராமப்பகுதிகளில் முன்னெடுக்கப்படும் வீதிஅபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.

கிராமிய பொருளாதார அபிவிருத்தியில் வீதி அபிவிருத்தி முக்கியமானதொன்றாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கிராம மக்களின்வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதில் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பார்க்கிலும் அதிவேகமில்லாத வீதி அபிவிருத்தியின் முக்கியத்துவத்தைவலியுறுத்தினார்.

Related posts: