சுய பூட்டுதல் வரவேற்கத்தக்கது – சிறு தொழில்கள் செய்து வாழ்க்கையை நடத்தும் மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!
Friday, August 20th, 2021கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த கடை உரிமையாளர்கள் எடுத்த முடிவு குறித்து இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பாராட்டு தெரிவித்துள்ளார்.
பல்வேறு நகரங்களிலுள்ள கடைகள் தாமாக முன்வந்து மூடப்பட்டாலும் மக்கள் மற்ற பகுதிகளில் உள்ள கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவது நடைமுறையில் இருக்காது என்று இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
மக்கள் அப்பகுதிகளின் பாதுகாப்பு குறித்து சிந்தித்து இத்தகைய நடவடிக்கை எடுப்பது அவசியம் எனவும் அவர் கூறினார்.
பெரிய வர்த்தகர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கினாலும், சிறு தொழில்கள் செய்து வாழ்க்கையை நடத்தும் மக்களையும் இந்தத் தருணத்தில் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் இந்தத் திட்டம் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் முன்னெடுக்கப்பட்டால் நல்லது என்றும் அவர் கூறினார்.
Related posts:
திட்டங்களை தடை செய்வது பாவச் செயல் - கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்!
கிராமிய வீடமைப்பு செயற்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து பிரதமர் துறைசார் தரப்பினருடன் ஆலோசனை!
சுற்றுலாப் பயணிகளின் வருகை இலங்கையில் கொரோனா அலைக்கு வழிவகுக்காது - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப...
|
|