சுற்றுலாப் பயணிகளின் வருகை இலங்கையில் கொரோனா அலைக்கு வழிவகுக்காது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, August 12th, 2021

சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் நாட்டை திறப்பது நாட்டில் ஒரு கொரோனா அலையை உருவாக்க வழிவகுக்கவில்லை சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் சுகாதார ஆலோசனைகளை கடைபிடித்து சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வரவழைக்கப்பட உள்ளதாகவும் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கொவிட் – 19 தொற்று நோயால் கஷ்டங்களை எதிர்கொண்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு தற்போது நிதி வாய்ப்புகள் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏறத்தாழ மூன்று மில்லியன் மக்கள் சுற்றுலாத் தொழிலைச் சார்ந்துள்ளனர். அத்தகைய நபர்களுக்கு அரசாங்கம் சலுகைகளை வழங்கி வருகிறது என்றாலும் அது தற்காலிகமானது மற்றும் போதுமானதாக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்ய ஒரே வழி சுற்றுலாத்துறையே என தெரிவித்தள்ள அவர் சுகாதார வழிகாட்டல்களைக் கடைப்பிடிக்கும் போது சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து நாட்டிற்கு அழைத்து வரப்படுவது சாத்தியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே தடுப்பூசி போடும் பணிகளானது தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதால், நாட்டை முடக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சட்டிக்காட்டியுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சுகாதார துறையினர் மற்றும் பொது மக்கள் என அனைவரும் கொவிட் -19 இனை எதிர்க்கொண்டு தொற்றுநோயை சமாளிக்க தங்கள் தனிப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கடற்றொழிலாளர் வாழ்வு மேம்பட வருமானங்களை முதலீடாக்கும் பொறிமுறை அவசியம் - கிளிநொச்சி மாவட்ட ஒருங்கி...
வடக்கு மாகாண கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் - வட மாகாண அதிபர்கள் சங்கம...
உரிய காலத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் – குறிப்பிட்ட பொதுத் தேர்தலும் நடத்தப்படும் - ஜனாதிபதி ஊடகப் பிர...